தமிழக பாஜக துணை தலைவராக அண்ணாமலை நியமனம்.. ஓரங்கட்டப்படும் எல்.முருகன்..!
தமிழக மாநில பாஜக துணை தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-29

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில், தன்னை அக்கட்சியோடு இணைத்துக் கொண்டார் அண்ணாமலை. இந்நிலையில் அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.