நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,06,700 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்.. அமைச்சர் S.P.வேலுமணி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு குழாய் வழியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில், நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், அங்குள்ள 1,337 கிராமங்களில் 3 லட்சம் குடிநீர் இணைப்புகளை, வருகிற 2024-ம் ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு 53 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 700 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பணி அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார்.