கடவுளின் செயலா?.. நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி
டெல்லி, ஆகஸ்ட்-29

பொருளாதார பின்னடைவை கடவுளின் செயல் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம், பொருளாதாரப் பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் கடவுளின் தூதரான மத்திய நிதியமைச்சர், பேரிடர் ஒருவேளை கடவுளின் செயலாக இருந்தால், 2017 – 18, 2018 – 19, 2019 – 20ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசமான மேலாண்மையை எவ்வாறு வர்ணிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் இருப்பதால் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வரிவருவாய் இழப்பை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பதற்கும் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.