பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியளித்த நிதியமைச்சரின் கணவர்!!!

புதுடெல்லி, அக்டோபர்-14

பொருளாதாரத்தில் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகனை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் கருத்தால், பாஜகவுக்கு பெரிய தர்ம சங்கடம் உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர். இவர் நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், ‘பாஜகவால் சொந்தமாக எந்த ஒரு பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்க இயலாது. நரேந்திர மோடி அரசானது தங்களது முன்னோடிகளாகிய முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார மாதிரிகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதார கொள்கைகளை பொருத்தவரை பா.ஜ.க. அரசு மற்றவர்களைக் கூறி வருகிறதே தவிர, தனது சுயமான பொருளாதார கொள்கை எதுவென்பதை உணரவில்லை’ என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் இந்த விமர்சனமானது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *