எம்.பி.வசந்தகுமார் உடல் நாளை காலை 10 மணிக்கு அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம்

சென்னை, ஆகஸ்ட்-29

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொர்ந்து, காமராஜர் அரங்குக்கு கொண்டு செல்லப்பட்ட வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, சென்னையில் இருந்து சொந்த ஊருனான கன்னியாகுமரிக்கு வசந்தகுமார் எம்.பி. உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *