திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அவரது மனைவிக்கு கொரோனா..

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-28

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரேனா உறுதியானதை அடுத்து ஜெகத்ரட்சகன், அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இருவரின் உடல் நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *