மதம், மொழியால் மக்களை பா.ஜ.க. பிரிக்கிறது -ராகுல் காந்தி

சண்டிகர், அக்டோபர்-14

அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு வருகிற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஹரியாணாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுகிறார். சாதாரண மக்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இந்த நாட்டு மக்களை ஜாதி, மதம், மொழியின் பெயரில் பிரித்தாள நினைக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஒற்றுமை படுத்துகிறது. பிரதமர் மோடியை ட்ரம்ப், அம்பானி போன்றவர்களுடன் தான் பார்க்க முடியும். விவசாயிகளுடன் சேர்த்து பார்க்க முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *