தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி… முதல்வர் திட்டவட்டம்

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டமன்றம் உள்பட அனைத்து தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, ஆகஸ்ட்-28

தமிழக முதலமைச்சரும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூட்டணி தலைமை குறித்து கூறுகையில் ‘‘எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலம் முதலே அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் அதிமுக-தான் தலைமை வகித்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் அதே நிலை தொடரும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக-தான் தலைமை வகிக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *