எம்.பி வசந்தகுமார் மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்
கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-28

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே எச்.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில், ”மக்களவை உறுப்பினரான எச்.வசந்தகுமாரின் மறைவு வருத்தமளிக்கிறது. வணிகம் மற்றும் சமூக சேவையில் வசந்தகுமாரின் பங்கு மிகப்பெரியது. தமிழகத்தை முன்னேற்றமடையச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வர்ம் அவருடனான கலந்துரையாடலில் தெரிந்தது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.