பிக் பாஸ் சீசன் 4.. வீடியோவில் அறிவித்த கமல்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-28

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் 4 தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *