திருவாரூர் மாவட்டத்தில் ரூ.22.60 கோடி திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்..
திருவாரூர், ஆகஸ்ட்-28

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் ரூ.22.06 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் 14 திட்டப் பணிகளை பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 781 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பழனிசாமி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.