தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.39,392-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.39,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, ஆகஸ்ட்-28

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும், சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்க விலை வரலாற்றில் அதிகப்பட்சமாகும். அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,903க்கும், சவரன் ரூ.39,224க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,496க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.39,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ.4,924-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு உயர்ந்து ரூ.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.