அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழக அமைச்சர் ஓ. எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி (60) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சென்னை, ஆகஸ்ட்-28

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி (60) கடந்த ஓராண்டுக்கு மேலாக உடல்நலக் குறைவுடன் காணப்பட்டார். உடல் நலப் பாதிப்பு அதிகமானதால் கடந்த 2 வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், அவர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவர்களுக்கு பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இறுதி சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு ஓரடியம்புலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *