தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,94,180 வாகனங்கள் பறிமுதல்

சென்னை, ஆகஸ்ட்-28

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,96,812 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,557 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,99,911 லட்சம் வழக்குகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.21.80 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அனுமதியின்றி வெளியே சுற்றியதாக, 6,94,180 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 358 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *