இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33.87 லட்சத்தை கடந்தது..!
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33.87 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 61ஆயிரத்தை தாண்டியது.
டெல்லி, ஆகஸ்ட்-28

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 77,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 42 ஆயிரத்து 023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 60,177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,057 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61,529 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.