உலகளவில் கொரோனாவுக்கு 8,34,791 லட்சம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்தை கடந்துள்ளது.

ஆகஸ்ட்-28

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 873 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 66 லட்சத்து 93 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 396 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 84 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 60,46,064
பிரேசில் – 37,64,493
இந்தியா – 33,10,235
ரஷியா – 9,75,576
தென் ஆப்பிரிக்கா – 6,18,286
பெரு – 6,13,378
கொலம்பியா – 5,82,022
மெக்சிகோ – 5,73,888
ஸ்பெயின் – 4,51,792
சிலி – 4,04,102

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *