சீர்காழி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாரதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
சீர்காழி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாரதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ., சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-27

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையொட்டி பரிசோதனை மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.