ஓணம் பண்டிகை.. கோவை மாவட்டத்துக்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
கோவை, ஆகஸ்ட்-27

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் அன்று ஒருநாள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட உள்ளூா் விடுமுறை நாளுக்குப் பதிலாக செப்டம்பா் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் வேலை நாள்களாக செயல்படும்.
உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியுடன், பாதுகாப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.