இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-27

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 75,760 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33,10,235 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1023 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 56,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,23,772 பேர் குணமடைந்தள்ளனர். 7,25,991 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,472 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்ப்பு விகிதம் 1.83%; குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *