மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா, ஆகஸ்ட்-26

மேற்குவங்கத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் 20-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கின்போது முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தற்போதும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கின்போது செப்டம்பர் 7, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.