மாணவர்களுக்கு இலவச காலை உணவு-சென்னை மாநகராட்சி அசத்தல்

சென்னை, அக்டோபர்-14

அரசுப் பள்ளிகளில் காலை நேரத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும் என்பது கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டமாக வைத்திருந்தார். ஆனால், பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தி அக்‌ஷய பாத்திர என்ற அறக்கட்டளையுடன் இணைந்து சிற்றுண்டி திட்டத்தை சென்னை பெருநகர மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

சென்னை தரமணி, திருவான்மியூர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் உள்ள 16 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் 5 ஆயிரம் குழந்தைகள் முழுமையாக பயனடைகிறார்கள்.  குடும்பச் சூழல் காரணமாகவும், படிப்புக்காக நீண்ட தொலைவு பயணித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளின்போது, மாலை நேரத்தில் சுண்டல், பட்டாணி ஆகியவற்றை சென்னை பெருநகர மாநகராட்சி வழங்கி வருகிறது. இது குறித்து கூறிய மாநகராட்சி அதிகாரி, பல பள்ளிகளிடம் இருந்து திட்டம் குறித்து கருத்துகளைக் கேட்டுள்ளோம். அவை கிடைத்தவுடன் அடுத்தடுத்து பல பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் நடவடிக்கையை குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *