மக்களின் பொறுப்பற்ற செயல்கள் தான் கொரோனா பரவ காரணம்.. ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை, ஆகஸ்ட்-26
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது ;-

ஊரடங்கை மதிக்காதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்கள் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்கு காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது சரியானது தான்.
இதையே தான் கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன். மக்கள் அதை பின்பற்றாதது தான் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகும். இனியாவது மக்கள் முன்னெச்சரிக்கை விதிகளை கடைபிடிக்க வேண்டும்!