தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு… 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்
தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 3 வேளாண் உதவி இயக்குநர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட்-26

தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்றது.கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன், விழுப்புரம் மாவட்டம் வல்லம் வேளாண்துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் என 13 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார்.