தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ரூ.21.57 கோடி அபராதம் வசூல்..!
சென்னை, ஆகஸ்ட்-26

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,93,443 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 9,92,583 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 8,97,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ 21,57,26,633 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.