இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 59ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-26

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 32,34,474 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,059 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,449 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 63,173 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 24,67,759 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,07,267 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.84%; குணம்டைந்தோர் விகிதம் 75.92% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *