டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். 600 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 5 வது வீரர் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் ஆவார். தனது 156 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆண்டர்சன் 600 வது விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆகஸ்ட்-26

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சௌதாம்படனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 599 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஆண்டர்சன்.

இந்த நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக நீண்ட நேரத்துக்குப் பிறகே, இன்றைய ஆட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 31 ரன்கள் எடுத்திருந்த அசார் அலியை ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) மற்றும் அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *