உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 8.23 லட்சம் பேர் பலி.. குணமடைந்தோர் எண்ணிக்கை 1.65 கோடியாக உயர்வு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 65 லட்சம் பேர் குணமடைந்தனர். அதே நேரத்தில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆகஸ்ட்-26

COVID-19 Coronavirus Greatest Danger on a World Map on a digital LCD Display Map source: https://www.nasa.gov

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,65,99,377 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,40,50,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8,23,278 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66,27,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *