இந்தியர் உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!!!

ஸ்டாக்ஹோம், அக்டோபர்-14

2019-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த பேனர்ஜி உட்பட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு இந்தியாவில் பிறந்தவர் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் ஆகிய மூன்று பேரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பகிர்ந்து கொள்கின்றனர். உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக இந்த மூன்று பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அபிஜித் பேனர்ஜியின் பூர்வீகம் இந்தியாவாகும். கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். கொல்கத்தா பிரசிடென்சி, டெல்லி நேரு பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் அபிஜித் பேனர்ஜி கல்வி பயின்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *