தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. வருகிற 29ம் தேதி முதல்வர் ஆலோசனை..!!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-25

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு இ பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இ பாஸ் ரத்து செய்வது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *