பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை..!

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-25

தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூரு, சிக்கமகளூரு பகுதிகளில் காவல்துறையின் முக்கியப் பதவிகளை வகித்து, தனது சிறப்பான பணியால் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சமூக ஆர்வலராக மாறினார். தமிழகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை; சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, தான் ஒரு தேசியவாதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அபிமானி என்று கூறியிருந்த அண்ணாமலை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைத்ததுமே எனது முதல் தேர்வாக இருந்தது பாஜக தான் எனவும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *