காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார்..செயற்குழு கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என டெல்லியில் 7 மணி நேரமாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-24

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 7 மணியளவில் முடிந்தது.

முன்னதாக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நேற்று மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விகளுக்கு கட்சியின் தலைமையும் காரணம். கட்சியின் தலைமை துடிப்பாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குள் நிர்வாக ரீதியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.தலைமையை மாற்றக் கோரி அதிருப்தி தலைவர்கள் எழுதிய கடிதம் கசிந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

காரசாரமாக 7 மணி நேரம் நடந்த செயற்குழு கூட்டத்துக்கு பின் சோனியாவே நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமக்கு பதில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சோனியா காந்தி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *