ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக கூறும் திமுக இந்துக்கள் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை?.. எல்.முருகன்
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்று மாநில தலைவர் எல் முருகன் பேசியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-24

சென்னை தியாகராய நகரில் பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;-
திமுக நவீன தீண்டாமையை கடைப்பிடித்து வருகிறது. வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கொரோனா சூழலில் மக்கள் பணி செய்யும் மத்திய, மாநில அரசுகளை குறைகூறுவதிலேயே ஸ்டாலின் பிழைப்பாக வைத்துள்ளார். கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியதை திமுகவும், காங்கிரசும் கண்டுகொள்ளவில்லை. இந்து வழிபாட்டின் மீது களங்கம் கற்பித்து திமுகவும், காங்கிரசும் ஒருசேரச செயல்பட்டு வருகிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பொய் பரப்பி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. வருகின்ற காலம் பாஜகவின் காலம். பாஜகதான் அரசியலை நிர்ணயிக்க உள்ளது. கொரோனா சூழலை கையாண்டதில் உலகிற்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி திகழ்கிறார்.
என் குழந்தை இந்தி கற்கக் கூடாது எனக் கூறுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் நினைப்பது போல் தமிழகம் இப்போது இல்லை. தமிழகம் தற்போது ஆன்மீக பூமி. ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக கூறும் திமுக இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து ஏன் சொல்வதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.