ட்விட்டரில் மன்னிப்பு கேட்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு உத்தரவு

புதுடெல்லி, அக்டோபர்-14

72 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ட்விட் பதிவிட வேண்டும் என துக்ளக் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பற்றி ட்விட்டரில் பல தகவல்களை பதிவிட்டார். வழக்கு ஒன்றில் சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாக்கவுக்கு எதிராக மகராஷ்டிரா காவல்துறை தொடர்ந்த வழக்கை நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து, நவ்லாக்காவை விடுவித்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த குருமூர்த்தி நீதிபதி முரளிதரருக்கும், நவ்லாக்காவுக்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பதாகவும், இதனால் தான் அவரை வழக்கில் இருந்து விடுவித்திருப்பதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீதிமன்ற மாண்பை சிதைக்கும்வகையில் ட்விட்டர் பதிவு இருப்பதாக நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து குருமூர்த்தியை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிடவேண்டும் என குருமூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே அவதூறாக போட்ட பதிவை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *