சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223ஆக உயர்வு..!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-24

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இதுவரை கொரோனா பாதித்து 1,09,585 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு சிக்சசை பெற்று வந்தவர்களில் 2581 பேர் உயிரிழந்துள்ளனர். 13,223 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கத்தில் 1,631 பேரும், அண்ணா நகரில் 1481 பேரும், அம்பத்தூரில் 1404 பேரும், அடையாறில் 1232 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை மண்டலத்திலேயே அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 371 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *