கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-24

பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குக் கடந்த 5-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி.க்கு சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது, எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து என் தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *