தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024-க்கு விற்பனை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட்-24

கொரோனா பீதியிலும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5003 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *