பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள்

தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற இன்று கடைசிநாள் ஆகும்.

சென்னை, ஆகஸ்ட்-24

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செப்டம்பா் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு லட்சத்து 60,834 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி இருந்தனர்.
இதேபோன்று பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளில் சேர மொத்தம் 27,721 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 18,444 போ் கட்டணம் செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவா்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சான்றிதழ் பதிவேற்றம் செய்தபின்பு, ரேண்டம் எண் வெளியிடப்படும். அதுகுறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை இன்று தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *