ஜப்பான்: ஹகிபிஸ் புயலுக்கு 31 பேர் பலி

சென்னை, அக்டோபர்-14

ஜப்பானில் தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு இதுவரை 31 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஹகிபிஸ் புயல் ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசிய ஹகிபிஸ் புயல் டோக்கியோவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள், புயல் காரணமாக சுமார் 31 பேர் பலியாகினர். 186 பேர் காயமடைந்தனர். 15 பேர் மாயமாகினர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் வாழ்நாளில் இம்மாதிரியான வெள்ளப் பெருக்கைக் கண்டதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானில் சில இடங்களில் தொடர்ந்து மழை பொழியும் என்று ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *