தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டும் விஸ்வாசமாக இருங்கள்.. ஓ பன்னீர்செல்வம்
தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
தேனி, ஆகஸ்ட்-23

தேனி பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது ;-
‘தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதே இல்லை. கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை மட்டுமே பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். மேலும், பல நூற்றாண்டுகள் அதிமுக நிலைத்திருக்கும். 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றிபெற களப்பணியாற்ற வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையும்’ என்று பேசியுள்ளார்.