தமிழகத்தில் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 97 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-23

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,19,327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,047 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,541 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 970 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 6,517 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,25,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,09,585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,581 ஆக உள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 139 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 63 அரசு மருத்துவமனைகளிலும், 76 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • தமிழகத்தில் இதுவரை 42,06,617 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,29,068 பேரும், பெண்கள் 1,50,288 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
  • தமிழகத்தில் 12 வயதிற்குள் 17,928 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,12,960 பேரும், 60 வயதிற்கு மேல் 48,497 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *