இ-பாஸை ரத்து செய்யுங்கள்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!
டெல்லி, ஆகஸ்ட்-22

மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் தனிநபர் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.