கொள்ளையன் சுரேஷுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்…

திருச்சி, அக்டோபர்-14

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சுரேஷை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, திருச்சி நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். இதனிடையே சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிகோரி திருச்சி நீதிமன்றத்தில் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோசலராமன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட சுரேஷ், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, தன்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினால் போலீசார் அடித்து காலை உடைத்துவிடுவார்கள் என தனக்கு பயமாக இருப்பதாக நீதிபதியிடம் சுரேஷ் கதறியுள்ளான்.

தொடர்ந்து விசாரணை செய்த நீதிமன்றம், சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சுரேஷை அழைத்துச்சென்ற போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *