விநாயகர் சதுர்த்தி.. சேலம் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

சேலத்தில் உள்ள தனது வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.

சேலம், ஆகஸ்ட்-22

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் திருவகவுண்டனூர் இல்லத்தில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழிபட்டார். களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு குடும்பத்தினருடன் முதல்வர் பழனிசாமி வழிபட்டார். பூஜையின் போது முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றிம் வழிபட்டனர்.

அதேபோல விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *