அமேசான் பிரைமில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது ”சூரரைப் போற்று” திரைப்படம்.. நடிகர் சூர்யா அறிவிப்பு..!!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-22

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படாமல் இருந்தது. தியேட்டர்கள் திறந்ததும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். அமேசான் பிரைம் நிறுவனம் அக்டோபர் 30-ம் தேதி படத்தை வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிடி-யில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், திரையரங்கில் சூரரைப்போற்று வெளியிடுவதற்கான கால சூழ்நிலை தற்போது இல்லை என்றும் , சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும். இந்த கொரோனா காலத்தில் தன்னலம் பாராமல் உழைப்பவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *