கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்தியானந்தா..!

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை நித்யானந்தா இன்று வெளியிட்டுள்ளார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-22

பாலியல் புகார், ஆட்கடத்தல், கொலை வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நாட்டில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார்.கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று அதை முறையாக அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், சமூகவலைதளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *