கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும்.. முதல்வர் சென்னை தின வாழ்த்து..!
கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-22

சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் சென்னை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) 381 ஆம் ஆண்டு சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! என தெரிவித்துள்ளார்.