இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியது..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 945 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, ஆகஸ்ட்-22

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 29,75,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 945 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55794 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,58,947-ல் இருந்து 22,22,578 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,97,330 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *