டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதியுதவி
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரை நேரில் சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிவாரணமாக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
டெல்லி, ஆகஸ்ட்-21

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ராஜூ என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மஜ்னு தில்லா பகுதியில் உள்ள குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிவாரண நிதிக்கான காசோலையையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ராஜூ, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுபோன்ற கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றுபவர்களால் பெருமை கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.