வேட்டி கட்டுவதை பிரதமர் தொடரவேண்டும்-வைரமுத்து

சென்னை, அக்டோபர்-14

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் வைரமுத்து அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கலைஞர் பிறந்த மண்ணில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகவும், அது தொடர்பான சில கருத்துகளை அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டியது நன்றாக இருந்தது, அதை அவர் தொடர வேண்டும் என வைரமுத்து கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *