தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-21

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த், உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500க்கும் வீரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ;-

 1. ரோஹித் ஷர்மா ( கிரிக்கெட்)
 2. மாரியப்பன் தங்கவேலு (தடகளம்)
 3. மனிகா பத்ரா ( டேபிள் டென்னிஸ்)
 4. விக்னேஷ் போகத் ( மல்யுத்தம்)
 5. ராணி ராம்பால் ( ஹாக்கி)

வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியா விருது 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சாரியா விருது ;-

 1. தர்மேந்திரதிவாரி( வில்வித்தை)
 2. புருஷோத்தம்ராய்( தடகளம்)
 3. ஓம்பிரகாஷ் தாகியா( மல்யுத்தம்)
 4. சிவ்சிங்(குத்துச்சண்டை)
 5. ஹாக்கி பயிற்சியாளர் ரொமேஷ் பதானியா
 6. கபடி பயிற்சியாளர் கிருஷணகுமார் ஹுடா
 7. விஜய் பாலச்சந்திர முனீஸ்வர( வலு தாக்குதல்)
 8. நரேஷ்குமார்(டென்னிஸ்)

விளையாட்டு துறையின் பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூனா விருது

அதானு தாஸ் (வில்வித்தை)
டூட்டி சந்த் (தடகளம்)
சாத்விக் சைராஜ் (பாட்மிண்டன்)
சிராக் சந்திரசேகர் (பாட்மிண்டன்)
விஷேஷ் (கூடைப்பந்து)
சுபேதார் மனிஷ் கெளசிக் (குத்துச்சண்டை)
லவ்லினா (குத்துச்சண்டை)
இஷாந்த் சர்மா (கிரிக்கெட்)
தீப்தி சர்மா (கிரிக்கெட்)
சாவந்த் அஜய் (குதிரையேற்றம்)
சந்தேஷ் (கால்பந்து)
அதிதி அசோக் (கோல்ப்)
ஆகாஷ்தீப் சிங் (ஹாக்கி)
தீபிகா (ஹாக்கி)
தீபக் (கபடி)
கேல் சரிகா (கோ கோ)
தத்து பாபன் (துடுப்புப் படகு)
மானு பாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்)
செளரப் செளத்ரி (துப்பாக்கிச் சுடுதல்)
மதுரிகா (டேபிள் டென்னிஸ்)
திவிஜ் சரண் (டென்னிஸ்)
ஷிவா கேசவன் (குளிர்கால விளையாட்டு)
திவ்யா (மல்யுத்தம்)
ராகுல் அவரே (மல்யுத்தம்)
சுயாஷ் (நீச்சல், மாற்றுத்திறனாளி)
சந்தீப் (தடகளம், மாற்றுத்திறனாளி)
மனீஷ் (துப்பாக்கிச் சுடுதல், மாற்றுத்திறனாளி)

மேலும் தயான் சந்த் விருதும் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 29ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *